'இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கும்...' கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் எப்போது அறிமுகம்...? - பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரத் பயோடெக் நிறுவனம் வரும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து வரும் 2021-ம் ஆண்டின் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிற்கு இதுநாள் வரை ஒரு முழு நிவாரணமாக தடுப்பு மருந்து வெளிவந்தபாடில்லை. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் பல மருந்து நிறுவனங்களும் அயராது கொரோனா தடுப்பி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனை அளவில் ஈடுபட்டு வருகின்றன. அதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) சேர்ந்து 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி, 2-வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. 3வது கட்ட பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு (டிசிஜிஐ) பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இதற்கு டிசிஜிஐ-யும் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் தற்போது இந்த கோவாக்சின் தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி கோவாக்சின் தடுப்பு மருந்தின் மீதான 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசோதனையானது 14 மாநிலங்களில் சுமார் 25 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு நடத்தபடவுள்ளது. இதன்காரணமாக வரும் 2021-ம் ஆண்டு 2ம் காலாண்டில் பரிசோதனை முடிவுகள் தெரிய வரும். ஜூன் மாதம் கோவாக்சின் தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
