“இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாOCI, PIO Card Holders, Foreign Nationals எனப்படும் இந்தியா வம்சாவழியினர், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![OCI, PIO Card Holders, Foreign Nationals can Visit India, Says MHA OCI, PIO Card Holders, Foreign Nationals can Visit India, Says MHA](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/oci-pio-card-holders-foreign-nationals-can-visit-india-says-mha.jpg)
உலக நாடுகளில் கொரோனா தொற்று உருவாகி, பல லட்சம் உயிர்கள் பலியானதை அடுத்து, இந்த கொடிய நோயை விரட்டும் முக்கிய தடுப்பு வழிமுறைகளுள் ஒன்றாக, ஊரடங்கு அல்லது பொதுமுடக்கத்தை உலக நாடுகள் கடைபிடிக்கத் தொடங்கின.
இதனால், பொதுப் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர் மெதுமெதுவாக விமானப் போக்குவரத்துகள் அனுமதிகப்பட்டன. இந்நிலையில்தான், தற்போது சுற்றுலா விசாவை (Tourism) தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவ உதவியாளர்கள் உட்பட மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினர் மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)