மறுபடியும் முதல்ல இருந்தா..! கட்டுக்கடங்காமல் அதிகரித்த ‘கொரோனா’.. மீண்டும் ‘ஊரடங்கை’ அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கட்டுக்கடங்காமல் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மறுபடியும் ஸ்பெயின் பிரதமர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஸ்பெயினில் இதுவரை பத்து லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மறுபடியும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுவதால், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
