பேருந்து, ரயில் மீது கற்கள் வீசி... போக்குவரத்தை முடக்கி... பாமகவினர் திடீர் போராட்டம்!.. சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சென்னையில் பாமக இளைஞர் அணித் தலைவர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை முதல் போராட்டம் நடத்துவதால் 5000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் ஜி.எஸ்.டி.சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பாமக போரட்டத்தையடுத்து 5000 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரக்கு வரும் 8 நுழைவாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரில் முக்கிய சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து பாமகவினரை போரட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல விடாமால் தடுக்க காவல்துறை தீவிரம் காட்டிவருகின்றனர். சாலையில் போக்குவரத்து நெரிசலில் நிற்கும் பேருந்து மீது சிலர் ஏறி நின்றுள்ளனர்.
சேலையூர் காவல்துறை உதவி ஆணையாளர் சகாதேவன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் தொடர்ந்து தமிழக அரசுக்கும் காவல்துறையினர்க்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
சாலை மறியலை தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், பெருங்கத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவின் ரயில்களின் மீது கற்களை வீசி எறிந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

மற்ற செய்திகள்
