“என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கோங்க”.. மேட்ரிமோனியில் வலை விரித்த ‘சென்னை’ வாலிபர்.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 27, 2022 11:47 AM

திருமண தகவல் மையம் மூலம் பெண் தேடிய கனடா தொழிலதிபரை சென்னையை சேர்ந்த நபர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai man cheats Canada businessman using fake matrimonial account

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊஞ்சமரத்தோட்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 42). எம்பிஏ பட்டதாரியான இவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் பச்சையப்பன் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அதில் விவாகரத்தான பெண் அல்லது கணவரை இழந்த பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்த சென்னை பெரம்பூரை சேர்ந்த செந்தில் என்பவர், தனது தங்கை ராஜேஸ்வரி கணவரை இழந்தவர் என்றும், அவருக்கு உங்கள் புகைப்படங்களை காண்பித்ததில் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார் மேலும் தனது தங்கையை திருமணம் செய்து கொள்ளுமாறு பச்சையப்பனிடம் செந்தில் கூறியுள்ளார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த பச்சையப்பன் கனடாவில் இருந்து கொண்டே செந்தில் மற்றும் அவரது தங்கை ராஜேஸ்வரியிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது வீடியோ காலில் பேச அழைத்த போதெல்லாம், தனது குடும்பத்தினர் கண்டிப்பானவர்கள் அதனால் வீடியோ கால் வேண்டாம் என ராஜேஸ்வரி மறுத்து வந்துள்ளார்.

இதனிடையே பச்சையப்பனிடம் பேசிய செந்தில் அவ்வப்போது தனது தங்கையின் குடும்பத் தேவைக்கு என கூறி பணம் வாங்கி வந்துள்ளார். மேலும் அப்பெண்ணுக்காக லட்சக்கணக்கான மதிப்புடைய பரிசுப் பொருள்கள் மற்றும் நகைகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பச்சையப்பன் அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக 3.60 லட்சம் மதிப்புடைய விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு, கடந்த மாதம் 23-ம் தேதி பச்சையப்பன் சென்னை வந்துள்ளார். அப்போது ஒரு நட்சத்திர விடுதியில் தங்கிய அவர், செந்திலை தொடர்பு கொண்டு அவரது தங்கையை அழைத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால் செந்தில் மட்டுமே பச்சையப்பன் சந்திக்க வந்துள்ளார். அப்போது தனது தங்கைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் அவரை இப்போது சந்திக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அதனால் தனது தங்கைக்கு வாங்கி வந்த பரிசுப் பொருட்களை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதில் சந்தேகமடைந்த பச்சையப்பன், ராஜேஸ்வரியை நேரில் சந்தித்த பின்புதான் பரிசுப்பொருள்களை கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறி மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பச்சையப்பனின் செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பச்சையப்பன் அப்போது இதுகுறித்து புகார் ஏதும் கொடுக்காமல் கனடாவுக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

இதனிடையே பச்சையப்பனின் குடும்பத்தினர் அவரது மனைவி வித்யா உடன் சமரசம் பேசி இருவரையும் இணைத்து வைத்துள்ளனர். அதனால் நீதிமன்றத்தில் தொடுத்த விவாகரத்து வழக்கை பச்சையப்பன் வாபஸ் பெற்றுள்ளார். மேலும் தங்கையை திருமணம் செய்து வைப்பதாக ஏமாற்றி பணம் பறித்த செந்தில் மீதும் பச்சையப்பன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் செந்திலை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு கணவரை இழந்த தங்கை என யாருமே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கூகுளில் தேடி அழகான பெண்ணின் புகைப்படத்தை வைத்து திருமண தகவல் மையத்தில் போலியான கணக்கில் செந்தில் தொடங்கியுள்ளார். அதன் மூலம் பச்சையப்பனை தொடர்பு கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் செல்போன் செயலி மூலம் பெண் குரலில் மாற்றிப் பேசி பச்சையப்பனிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

Tags : #CHENNAI #MATRIMONIAL #BUSINESSMAN #CANADA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai man cheats Canada businessman using fake matrimonial account | Tamil Nadu News.