சென்னையில் இருந்து டெம்போ வேனில் சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்.. உளுந்தூர்பேட்டை TOLL GATE அருகே அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெம்போ வேனில் எடுத்துச் செல்லப்பட்ட தங்க நகைகள் அடங்கிய சூட்கேஸ்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. அவுட் ஆகாமலேயே வெளியேறிய அஸ்வின்.. என்ன காரணம்..?
சென்னை
சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சொந்த ஊரான புதூர் நாகலாபுரத்திற்கு டெம்போ ட்ராவலர் வேன் மூலம் நேற்றிரவு சென்றுள்ளார். அப்போது தங்களது பொருட்களை சூட்கேஸ்களில் வைத்து வேனின் மேல்பகுதியில் போட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி
இந்த நிலையில், இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு டீக்கடையில் அனைவரும் தேனீர் அருந்தியுள்ளனர். அப்போது எதர்சையாக வேனின் மேல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ்களை பார்த்தபோது, 2 சூட்கேஸ்கள் மட்டும் மாயமாகியுள்ளது. உடனே சோதனை செய்ததில் 264 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த 2 சூட்கேஸ் பெட்டிகள் மட்டுமே காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
மாயமான சூட்கேஸ் பெட்டிகள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் உள்ள திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், விக்கிரவாண்டி முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள சாலையோர உணவகங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். சொந்த ஊருக்கு செல்லும் வழியில், தங்க நகைகள் வைத்திருந்த சூட்கேஸ் பெட்டிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
