“ராயுடு சூப்பரா விளையாடுனாரு.. ஆனா இங்கதான் நாங்க மிஸ் பண்ணிட்டோம்”.. கடைசி ஓவர் வரை போராடி தோல்வி.. ஜடேஜா கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்களும், பனுகா ராஜபக்சே 42 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை பிராவோ 2 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இந்த போட்டியை நாங்கள் சிறப்பாகவே தொடங்கினோம். ஆனாலும் பந்து வீச்சின் போது கடைசியில் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டோம். அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சின் போது நாங்கள் செயல்படுத்த நினைத்த திட்டங்கள் அனைத்தும் மிஸ்ஸாகி விட்டது. அம்பட்டி ராயுடு பேட்டிங்கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை. அதற்கு காரணம், முதல் 6 ஓவரில் சரியான தொடக்கம் கிடைக்காமல் போனதுதான்’ என்று ஜடேஜா கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8