'கல்யாணத்துக்கு லீவ் வேணும்ன்னு கேட்டா, கொடுத்திருப்பேன்'... 'அதுக்காக இப்படியா'... ஒரே லெட்டர்ல வைரலான விமானி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 16, 2020 02:11 PM

கடற்படை விமானி ஒருவர் திருமணத்துக்கு விடுமுறை கேட்டு மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Navy pilot\'s marriage invite becomes hit on social media

மும்பையில் கடற்படை விமானி ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அதற்கு விடுமுறை கேட்டு மேல் அதிகாரிக்கு நூதன கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘‘தோட்டாவை கடிக்க அனுமதி வேண்டும் என தொடங்கும் அந்த கடிதத்தில், குறுகிய காலத்தில் உங்கள் மீது ஒரு குண்டை தூக்கி போட்டதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் நானே என் மீது ஒரு அணுகுண்டை தூக்கி போட போவதால் நீங்கள் இதை ஏற்று கொள்வீர்கள் என நினைக்கிறன்.

வானில் பறந்து கொண்டு இருக்கும் போது வினாடி பொழுதில் நாம் எடுக்கும் முடிவுகளை போல, எனது முடிவை மறு ஆய்வு செய்ய அதிக நேரம் எடுத்து கொள்வதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே ஒருவரை ஒருவர் கொல்லாமல், நானும் அவளும் சேர்ந்து இருப்பது என முடிவு செய்துவிட்டோம். இதுபோன்ற நோய் தொற்று பரவல் நேரத்தில் இதற்கு எங்கள் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். எங்களை வாழ்த்த நீங்கள் வீடியோ காலில் வரலாம்.

முற்றிலும் அமைதியான இந்த நேரத்தில் பணியில் இருந்து வெளியே சென்று என்னை நானே பலி கொடுத்து, நீங்கள் மற்றும் மற்ற வீரர்களை போல திருமண பந்தம் என்ற மயான சுருளில் சிக்க உங்களிடம் அனுமதி கேட்டு கொள்கிறேன் என'' அந்த விமானி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த அதிகாரியும், விமானிக்கு ஈடுகொடுத்து, "எல்லா சிறந்த விஷயங்களும் இறுதியில் முடிவுக்கு வந்துவிட்டன. நரகத்துக்கு வரவேற்கிறேன்'' என பஞ்ச் கொடுத்துள்ளார்.