ANNAMALAI : "இது எதுக்கு இங்க..?".. மகளிர் தின விழா மேடையில் தனது பதாகையை அகற்றிய அண்ணாமலை.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் மேடையில் பேசும் முன்பு, அங்கு போடியமில் ஒட்டியிருந்த தனது புகைப்பட குட்டி பேனரை கிழித்து எறிந்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தில் பாஜக மெல்ல வளர்ந்து வருவதாகவும், பாஜக தேர்தலில் போட்டியிடுவதோ, ஜெயிப்பதோ மற்ற கட்சிகளை நம்பி இல்லை என்று தொடர்ந்து கூறிவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்மை காலமாக அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இதனிடையே மகளிர் தினத்தில் தமது ட்விட்டர் பதிவில், “எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது. சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, தமிழக பாஜக சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவை விமான நிலையம் அருகே உள்ள சித்ரா ஆடிட்டோரியத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் பெண்மையை போற்றுவோம் ,மாதர்களின் ஒற்றுமை மலரட்டும்,கலந்துரையாடுவோம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னதாக மேடைக்கு வந்த அண்ணாமலை, அங்கு போடியமில் இருந்த மைக் பெட்டியின் முகப்பில் பார்வையாளர்களை பார்த்தமாதிரி ஒட்டப்பட்டிருந்த தனது புகைப்பட போஸ்டரை முதலில் அகற்றி தூக்கி வீசினார். அதன் பின்னர் மேடையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்து மற்ற சிறப்பு விருந்தினர்களையும் பேசுவதற்கு அழைத்தார்.
மகளிர் தினமான மார்ச் 8 அன்று ஆண்களின் புகைப்படம் ஒட்டப்பட்டது எதற்கு என கேள்வி எழுப்பி தமது புகைப்படத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அகற்றியதாக இது தொடர்பில் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
