“3-ஆம் வகுப்பு வரை தான் படிச்சேன்”.. கதை சொல்லும் டாஸ்க்கில் மனம் திறந்த GP முத்து.. இடையில ஒன்னு சொன்னாரு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது, பிக்பாஸ் வீட்டுக்குள் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எண்களின் அடிப்படையில் கதைகளை சொல்லிவருகின்றனர். அப்போது சக போட்டியாளர்கள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பஸ்ஸரை அழுத்தலாம். வெளியே வைக்கப்பட்ட 3 பஸ்ஸரும் அழுத்தப்பட்டால், கதை சொல்பவர் தங்களது கதையினை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இந்நிலையில், GP முத்து தனது கதையை கூறினார். அப்போது அவர்,"நான் கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்தவன் தான். 3 ஆம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். சின்ன வயசுலயே வேலைபார்க்க போய்ட்டேன். தங்க செயின் செய்யுற வேலை பார்த்தேன். அதுக்கு அப்புறம் நானும் நண்பனும் கடை வச்சோம். அப்போ டிக்டாக்-னு ஒன்னு வந்துச்சு. நண்பனும் சென்னை போனப்போ, நான் டிக்டாக்-லேயே இருந்து ரொம்ப கிறுக்காயிட்டேன். கல்யாணமாகி சந்தோஷமா தான் இருந்தேன். டிக்டாக்-லேயே இருந்ததுனால தொழிலை பாத்துக்கிட முடியல. இதுனால வீட்டுல எல்லோரும் திட்டுனாங்க" என சொல்லும்போதே வெளியே ஷிவின், அசல் கோலார் மற்றும் ஜனனி ஆகியோர் பஸ்ஸரை அழுத்த கதை சொல்வதை நிறுத்தும்படி GP முத்துவிடம் பிக்பாஸ் சொல்கிறார்.
முன்னதாக GP முத்து கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே "அடிங்கலே" என்றார். ஹவுஸ்மேட்ஸ் சிலரிடம் தன்னை கதை சொல்லவிடாமல் தடுத்து தன்னை வெளியே அனுப்பி, அதன் வழியே தன்னை நாமினேட் பண்ணி வீட்டை விட்டு வெளியே அனுப்ப உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி ஹவுஸ்மேட்ஸூம் பஸ்ஸரை அழுத்த, கதை சொல்ல தொடங்கிய ஜிபி முத்து, “ஐயா. ராசா.. கோடி கும்புடு” என்று சொல்லிக்கொண்டே கையைடுத்து கும்பிட்டுக் கொண்டே வெளியே ஓடிவந்தார்.
Thalaivare🤞🤞🤞 #GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/mJT79T8eOg
— GP Muthu Army (@drkuttysiva) October 20, 2022