பாதாம் ... ஆதாம்.. பற்றி சீரியஸாக பேசிக்கொண்டிருந்த கமல்.. அப்போ பாத்து ஜிபி முத்து பண்ண வேலை.. தலைவர் ராக்ஸ்..! கலகலப்பான வார இறுதி எபிசோடு! BIGG BOSS 6 TAMIL

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Oct 15, 2022 10:57 PM

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

gp muthu ate Almonds while kamal talking to him bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

gp muthu ate Almonds while kamal talking to him bigg boss 6 tamil

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

gp muthu ate Almonds while kamal talking to him bigg boss 6 tamil

இதனிடையே ஒருவாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க், நடந்து வந்தது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டனர். அணிகளாக பிரிந்து வீட்டின் வேலைகளை செய்தனர். அதற்கான அதிகாரப் பகிர்வும், அதிகாரப்பிரிவுகளும் அரங்கேறின. சிறு சிறு மனஸ்தாபங்கள் தொடங்கி, பெரு வெடிப்புகளும், பிரச்சனைகளும், சண்டைகளும் , சச்சரவுகளு என ஏறக்குறைய 40 வது நாள் நடக்கவேண்டியவை எல்லாம் கூட முதல் வாரத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய பிக்பாஸின் முதல் வார இறுதியான இந்த வார இறுதியில், நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களிடம் அகம் டிவி வழியே பேசினார்.

gp muthu ate Almonds while kamal talking to him bigg boss 6 tamil

தொடர்ந்து இந்த ஒரு வாரம் நடந்த சம்பவங்களை குறித்த சில குறிப்புகளை கொண்டு ஹவுஸ்மேட்ஸ்களிடம்  சற்று கிளறி பார்த்தார் கமல். அந்த வகையில் எடுத்த எடுப்பிலேயே கமல், “நான் ஜிபி முத்து உடன் பேச வேண்டும்” என்று அகம் டிவி வழியே பேசினார். அதில், கமல்ஹாசன், “நான் உங்களை உள்ளே அனுப்பும் போது என்ன சொல்லி அனுப்பினேன்? நினைவு இருக்கிறதா?” என்று கேட்கிறார். அவரோ புரியாமல் தவிக்கிறார். மீண்டும் கமல், “முதல் நாள் நான் உங்களிடம் என்ன சொல்லி அனுப்பினேன் என்பது உங்களுக்கு நினைவில்லையா? நாம் இருவரும் தான் பேசினோம். அதனால் வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்கிறார்.

ஜிபி முத்துவோ, “எனக்கு எதுவும் நினைவில்லை.. என்ன ? என்ன ?” என்று வினவுகிறார். அப்போது மீண்டும் கமல்ஹாசன், “சரி என்னையாவது நினைவு இருக்கிறதா? நான் தெரிகிறேனா?” என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு, “நினைவிருக்கு” என்று ஜிபி முத்து சொல்ல.. அப்போது கமல்ஹாசன், “உங்களுக்கு அங்கு ஒரு பொருள் வைத்திருக்கிறேன்.. சென்று எடுத்து வாருங்கள்” என்று சொல்லி அனுப்புகிறார். ஜிபி முத்து அங்கு சென்று பாதாமை எடுத்துக் கொண்டு வருகிறார். அது என்ன என்று கமல்ஹாசன் கேட்கிறார், அதற்கு இது பாதம் என்று ஜிபி முத்து சொல்ல,  உடனே கமல் விளையாட்டாக, “அப்படியானால் பாதாம் தெரியுது.. ஆதாம் தெரியவில்லையா? ஆதாம் கோச்சிக்கிட்டார்” என்று கமல் கூற ஜிபி முத்துவோ, “ஆதாமா அவர் எங்கே இருக்கிறார்?” என்று வெள்ளந்தியாக கேட்கிறார்.

gp muthu ate Almonds while kamal talking to him bigg boss 6 tamil

மேற்கொண்டு ஆதாம் பற்றி கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜிபி முத்து பேசிக்கொண்டே ஒரு பாதாம் எடுத்து சாப்பிடுகிறார். அப்போது ஜாலியாக டென்ஷனான கமல்ஹாசன், “பாருங்க .. ஆதாம் பத்தி நான் பேசிக் கொண்டிருக்கிறேன்...  நீங்கள் பாதாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கமெண்ட் அடிக்கிறார். அதற்கு ஜிபி முத்த, “வீட்டில் பேச்சுவார்த்தையில் சாப்பிட்டு கொண்டே பேசுவோமே..  அதேபோல் சாப்பிட்டு விட்டேன் சாஅர்” என்று கூறுகிறார். இப்படி கலகலப்பாக ஜிபி முத்துவை கமல் வறுத்தெடுத்தார்.

Tags : #BIGG BOSS 6 TAMIL #BIGG BOSS TAMIL #BIGG BOSS TAMIL 6 #KAMAL HAASAN #KAMAL HASSAN #GP MUTHU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gp muthu ate Almonds while kamal talking to him bigg boss 6 tamil | Tamil Nadu News.