"உனக்கு என்ன பிரச்சனை..? ஏன் BODY SHAME பண்ற?".. தனலட்சுமி - அசல் வாக்குவாதம்.. என்னங்க ஆச்சு..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக்பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி - அசல் கோலார் இடையே வாக்குவாதம் நடைபெற, சக போட்டியாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், கதை சொல்லும் போட்டி பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக சொல்லவேண்டும். அப்போது சக போட்டியாளர்கள் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பஸ்ஸரை அழுத்தலாம்.
வெளியே வைக்கப்பட்ட 3 பஸ்ஸரும் அழுத்தப்பட்டால், கதை சொல்பவர் தங்களது கதையினை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எண்களின் அடிப்படையில் கதைகளை சொல்லிவருகின்றனர். தனலட்சுமி தன்னுடைய கதையை சொல்லும்போது தனது அம்மாவை பற்றி உருக்கமாக பேசியிருந்தார். இதனால் GP முத்து உள்ளிட்ட போட்டியாளர்கள் கண்கலங்கிவிட்டனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் தனலட்சுமி - அசல் கோலார் இடையே வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. அசீம், ஜனனி ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர். அப்போது அசல் கோலாரை பார்த்து தனலட்சுமி,"உனக்கு என்ன பிரச்சனை இப்போ" என பேச, அசீம் குறுக்கிட்டு என்ன ஆச்சு? எனக்கேட்கிறார். அப்போது தனலட்சுமி,"அண்ணா-னு கூப்பிட்டேன். என்ன அண்ணா-னு கூப்டுற? நீ எனக்கு பெரியம்மா மாதிரி இருக்கன்னு சொல்றான். அன்னைக்கு ஆன்டி மாதிரி இருக்கேன்னு சொல்லுறான். எதுக்கு Body Shame பன்றான்? (அசல் கோலாரை பார்த்து) உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு வலிக்குதா? நீ சோறு போடுறியா? அப்புறம் உனக்குலாம் உடனே பஸ்ஸரை அழுத்தி வெளில அனுப்பிருக்கனும்னு சொல்றான்" என அசீமிடம் சொல்கிறார் தனலட்சுமி.
அப்போது, அசீம் இருவரையும் சமாதானப்படுத்த, "நான் பேசிட்டு தான் வருவேன். வா, போ-னு சொல்ற " என தனலட்சுமியிடம் கேட்கிறார் அசல். அப்போது தனலட்சுமி,"நீ பக்கத்துல வந்து நின்னா பயந்துடுவாங்களா?" என கேட்க GP முத்து, அசீம் உள்ளிட்டோர் இருவரையும் விலகி செல்லும்படி செய்கின்றனர்.
Fight 😳 #GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/TtayP83NwQ
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022

மற்ற செய்திகள்
