"சென்னையில் வாடகை கொடுக்க முடியல!.. வாழ முடியல!"... 'நள்ளிரவில் 'வீடுகளை' காலி செய்து 'சொந்த ஊருக்கு' செல்லும் 'மக்கள்'! வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னைப் பெருநகரக் காவல்தூறை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதால் நாளை (ஜூன் 19) முதல் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.
இதனால் ஆவடி, போரூர், பூந்தமல்லி, குமனஞ்சாவடி ஆகிய பகுதிகளில் வாடகை வீட்டில் வசித்து, நாள்தோரும் 300 ரூபாய் அளவில் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்கள், மாதம் 10, 15 ஆயிரம் சம்பளம் பெறும் ஊழியர்கள் பலரும், பொதுமுடக்கம் காரணமாக வேலை, வருமானம், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக வாடகைக் கூட தர முடியாததால், சென்னையில் வசிக்க இயலாமல், லோடு ஆட்டோவிலும் டாட்டா ஏசியிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு பலரும் நள்ளிரவில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் சென்னையில் இருந்து வெளியேறி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இவர்களுள் இ-பாஸ் மற்றும் முறையான காரணம் இல்லாமல் வெளியூருக்கு செல்ல முயல்பவர்களை போலீஸார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

மற்ற செய்திகள்
