'சீனர்களின்' ரகசியம் சொல்லும் 'முன்னாள் அதிகாரி...' 'உபசரிக்கும்' போதே முதுகில் 'குத்துபவர்கள்...' அவர்களிடம் 'யுத்த நெறி' பயன்படாது...
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்லைப்பகுதியில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலையில், சீனர்களை நம்பி நம் இந்திய வீரர்கள் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாக இந்திய ராணுவத்தின் மலையேற்ற பிரிவு நிபுணரும் ராணுவ நுண்ணறிவு பிரிவின் முன்னாள் தலைவருமான ககன்ஜூத் கூறியுள்ளார்.
சீனர்களின் தந்திரம்குறித்து குறிப்பிட்ட அவர், "சீனர்கள் ஒரு போதும் நம்பிக்கைக்கு உரியவர்கள் கிடையாது, சூழ்நிலையைப் பொறுத்து உணவு, பானங்கள் கொடுத்து உபசரிப்பார்கள். ஆனால் , நம்மை எப்படி தாக்குவது என்று திட்டமிடுவார்கள். அவர்களுடைய ராணுவ கோட்பாடு எதிராளியை உணவு உபசரிப்பின் போது கூட குத்திக் கொல்ல அனுமதிக்கிறது. அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், மூர்க்கமானவர்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் நீண்டகால பாரம்பரியமான ராணுவ கொள்கைகளை இந்திய வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம் வீரர்கள் போரின் போதும் எதிரிகளை தழுவுவார்கள், ஆனால், ஒரு போதும் முதுகில் குத்தமாட்டார்கள்.
ஆனால், இந்த உன்னதமான எண்ணத்துடன் சீனர்களிடம் போரிட முடியாது. எனவே நம் வீரர்களும் சீனர்களைப் போலவே இரக்கமற்றவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சீனர்களைப் பொருத்தவரை இந்திய ராணுவ நெறி முட்டாள்தனமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீனர்களின் ஆன்மாவை புரிந்து கொள்ளவில்லை என்றால் நம் வீரர்கள் அவர்களை எதிர்த்து போராட முடியாது. சிறைப்பிடிக்கப்பட்ட நிராயுதபாணியான நம் வீரர்களை கொலை செய்வார்கள். ஆனால் அனைவரையும் கொன்று விட மாட்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை காட்டுவதற்காக வீரமரணம் அடைந்த சில வீரர்களின் உடல்களையும்,,வீரர்களையும் நம்மிடம் ஒப்படைப்பார்கள். சீனர்களின் குணத்தை நம் வீரர்கள் உணர்ந்தால் நல்லது. என கூறியுள்ளார்.
மேலும், சீன வீரர்கள் தைரியமானவர்கள் அல்ல. அவர்களால் எப்போதும் நம் வீரர்களுக்கு இணையாக போராட முடியாது. 1962 நடந்த சண்டையின் போது 100 அல்லது 200 இந்திய வீரர்கள் அடங்கிய குழு 3000 பேர் அடங்கிய சீனர்களை எதிர்த்து போராடியது குறிப்பிடத்தக்கது எனக் ககன்ஜூத் கூறியுள்ளார்.