சென்னை: "நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்".. "பரனூர் டோல் கேட்டில் பணம் கட்ட வேணாம்" என உத்தரவிட்ட செங்கல்பட்டு எஸ்.பி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் முழுமையான பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது.

இதனால் சென்னையில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய போலீசாருக்கு செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இதனால் வண்டலூர் பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இ-பாஸ் இல்லாத வாகனங்களை போலீசார் சென்னைக்குத் திருப்பி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும், ஏராளமான வாகனங்கள் இவ்வாறு நீண்ட வரிசையில் இருப்பதால் சுங்கச்சாவடிகள் பணம் வசூலிக்க வேண்டாம் என்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.கண்ணன் நேரில் வந்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் வெகு வேகமாக நகர்ந்து வருகின்றன.

மற்ற செய்திகள்
