அதிகரிக்கும் 'கொரோனா'வுக்கு நடுவிலும்... ஆறுதல் அளிக்கும் 'நல்ல' செய்தி இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் எல்லைகளை மூடுவது, ஊரடங்கை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை 53% உயர்ந்து நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் தற்போது வரையில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 12,237 பேர் மரணமடைந்து இருக்கின்றனர். அதே நேரம் இன்று காலை நிலவரப்படி 194325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 52.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 116752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 59166 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 50193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 27624 பேர் குணமடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
