“அவளுக்கு ஏன் தொல்லை கொடுக்குறே?..”.. லிவிங் டுகெதரில் இருந்த காதலி.. வீடியோ காலில் தோழி கண்முன்னே நடந்த கொடூரம்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 03, 2022 01:09 AM

டெல்லியில் காதலியை கொன்ற அஃப்தாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஷ்ரத்தா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இதே பாணியில் புதிய சம்பவம் பெங்களூரில் நடந்திருப்பது தென் இந்தியா முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணி இருக்கிறது.

Bangalore living together youth arrested in girl friend dead

Karnataka , Bangalore : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த நேபாளத்தை சேர்ந்தவர் 27 வயதான சந்தோஷ் தமணி. இவருடன் 23 வயதான இவரது கேர்ள் பிரண்ட் கிருஷ்ணகுமாரி லிவிங் டுகெதரில் இருந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். இந்த இருவரும் ஆளுக்கு ஒரு பியூட்டி பார்லர்களில் பணியாற்றி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து இருக்கிறது. இதனால் கோபம் அடைந்த சந்தோஷ், கிருஷ்ணகுமாரியை தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அவரது தோழி அங்கு வரவே, சந்தோஷ் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் தெரிகிறது

அதன் பின்னர் தம்முடைய தோழி கிருஷ்ணகுமாரியை தேடி வந்திருக்கிறார் இன்னொரு பெண். வந்தவர் தன்னுடைய தோழி மயக்கமடைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமாரி உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு கிருஷ்ணகுமாரியின் தோழி போலீசாருக்கு கொடுத்த புகாரியில்தான் இன்னும் பல விஷயங்கள் வெளியே தெரிய வந்து அதிர்ச்சிக்குள்ளாக வைத்துள்ளது.

அதன்படி, பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீசார் சந்தோஷ் தமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகுமாரியின் தோழியும் தனது தரப்பில் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அதன்படி சந்தோஷ் தமணி கிருஷ்ணகுமாரியுடன் லிவிங் டுகெதரில் இருக்கும் போதே பல பெண்களுடன் பேசிக் கொண்டிருப்பதையும், பழகிக் கொண்டிருப்பதையும் வழக்கமாக செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது கேர்ள் பிரண்ட் கிருஷ்ணகுமாரி உடைய தோழிக்கும் சந்தோஷ் தமணி போன் பண்ணுவது, வீடியோ கால் பண்ணுவது உள்ளிட்ட தகாத முறையில் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.

அதன்பிறகு கிருஷ்ணகுமாரியின் தோழி, சந்தோஷ் தமணி தமக்கு வீடியோ கால் பண்ணி தொல்லை கொடுப்பதாக தோழியிடம் கூற அதை கேட்ட கிருஷ்ணகுமாரி தம்முடைய காதலர் சந்தோஷ் தமணியை நேருக்கு நேராய் சென்று கேள்வி கேட்டிருக்கிறார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சந்தோஷ்தமணி கிருஷ்ணகுமாரியை அடித்தும் கழுத்தை நெரித்தும் கொல்ல முயற்சித்ததுடன் கிருஷ்ணகுமாரியிடம் இந்த விவகாரத்தைச் சொன்ன அந்த அந்த தோழிக்கும் வீடியோ கால் பண்ணிய சந்தோஷ் தமணி, வீடியோ கால் நேரலையில் கிருஷ்ணகுமாரியை தோழியின் கண் முன்னே அடித்துள்ளார்.

இதை பார்த்த கிருஷ்ணகுமாரியின் தோழியோ தமது தோழி அடி வாங்குவதை வீடியோ காலில் பார்த்து பதறி இருக்கிறார். உடனடியாக தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டு, தோழியை மீட்க செல்வதற்குள் அங்கிருந்து சந்தோஷ் தமணி தப்பி சென்றுவிட, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த தம்முடைய தோழி கிருஷ்ணகுமாரியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமாரி உயிரிழந்து விடவே போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணகுமாரியின் தோழி கொடுத்த வாக்குமூலத்தை கொண்டு சந்தோஷ் தமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் தன்னுடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்த காதலி ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்து கொன்றதுடன் 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்தும், பல்வேறு இடங்களில் வீசியும் கொடூரமான சம்பவங்கள் செய்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த வரிசையில் பெங்களூரில் இந்த லிவிங் டுகெதர் உறவில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : #பெங்களூரு #லிவிங் டுகெதர் #காதலி #காதலன் #கொலை #கொடூரம் #ஷ்ரத்தா #டெல்லி #அஃப்தாப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bangalore living together youth arrested in girl friend dead | Tamil Nadu News.