"பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர்"!.. பாஜக அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் முதல்வர் பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரவக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலைக்கு ஆதரவாக, முதல்வர் கே.பழனிச்சாமி களத்தில் இறங்கினார்.

தமிழக தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், வக்காளர்களை கவர, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், இன்றைய பிரச்சாரத்தில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக, முதல்வர் கே.பழனிச்சாமி களத்தில் இறங்கினார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி பெற்ற வேட்பாளரான அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பாஜகவின் அடிமையாக உள்ளது என்ற குற்றசாட்டிற்கு கடுமையாக பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "அவர் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம்; நாங்கள் அடிமையல்ல, அதிமுக- பாஜக கூட்டணி வலுவான வெற்றிக் கூட்டணியாக உள்ளது.
மாநில அரசு கொண்டு வரும் எந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி தேவை. அதனால், மத்தியில் உள்ள அரசோடு இணக்கமாக பணியாற்றினால் தான் மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டங்கள், மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றார்.
அரவக்குறிச்சி மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாத எம் எல் ஏ செந்தில் பாலாஜி, இப்போது அரவக்குறிச்சியை விட்டு கரூருக்கு தாவியுள்ளார் என கடுமையாக குற்றம் சாட்டினார்.
இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர், அரவக்குறிச்சிக்கு பிறகு பரமத்தி, வேடசந்தூர், ஒட்டம்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல், நத்தம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

மற்ற செய்திகள்
