IT JOBS: பிரெஷ்ஷர்களுக்கு விப்ரோ சூப்பர் வாய்ப்பு... செம்ம சான்ஸ், மலைக்க வைக்கும் சம்பளம்!
முகப்பு > செய்திகள் > வணிகம்விப்ரோ நிறுவனத்தில் பிரெஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய இந்த வேலைவாய்ப்பு பிரஷ்ஷர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பின்னர் ஐடி துறைகளில் மீண்டும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னணி டெக் நிறுவனங்கள் ஆன டிசிஎஸ், விப்ரோ, சிடிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் 2022-ம் ஆண்டு முதல் தங்களது ஆள் எடுக்கும் நடைமுறையில் அதிகம் பேரை பணியமர்த்தும் முயற்சியில் இறங்கி உள்ளன.
மேலும், தற்போது பிரெஷ்ஷர்களை அதிகம் வேலைக்குப் பணி அமர்த்தும் முயற்சியில் ஐடி நிறுவனங்கள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றன. பல ஐடி நிறுவனங்களில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு பணி உயர்வு, பதவி உயர்வு ஆகியனவும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கேம்ப்ஸ் இன்டெர்வியூக்களை அதிகரித்து பிரெஷ்ஷர்களை பணியமர்த்த விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.
இதற்காக விப்ரோ நிறுவனம் ஆண்டுக்கு 3.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பிரெஷ்ஷர்களைப் பணியமர்த்தும் பணியில் இற்ங்கி உள்ளது. இது தற்போது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து வேலைவாய்ப்புக்காகத் தயாராக நிற்கும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆக இருக்கும்.
விப்ரோ நிறுவனம் முதற்கட்டமான பொறியியல் படித்து முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விப்ரோ வெளியிட்டுள்ள இணைய வழி தகவல் அறிக்கையின் அடிப்படையில் பிஇ/ பி.டெக், எம்.இ/எம்.டெக் ஆகிய படிப்புகளை நிறைவு செய்தவர்கள் உடனடியாக விப்ரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பிக்கலாம்.
2020-ம் ஆண்டு கொரோனா பதற்றத்தால் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்து இருந்தன. 2021-ம் ஆண்டும் முடிந்துவிட்ட நிலையில் 2022-ம் ஆண்டு ஐடி துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேலைவாய்ப்பு குறித்து நிபுணர்களின் கருத்தும் இதுவாகவேதான் இருக்கிறது.
விப்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க உள்ளோர் 10-ம் வகுப்பு, +2, இளநிலை, முதுகலை படிப்புகள் வரை அனைத்திலும் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம். விண்ணப்பதாரர்களின் வயது கண்டிப்பாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்திய குடிமக்கள் ஆக இருக்க வேண்டும். பூடான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது குடியுரிமை சான்றிதழ் உடன் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 31, 2022 விப்ரோ நிறுவனத்துக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.