‘அச்சு அசலா அவர மாதிரியே..’.. ஒவ்வொரு தாய் மாமாவும் இத பார்த்தா கண் கலங்கிடுவாங்க.. நெஞ்சை உருக்கிய குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒட்டன்சத்திரத்தில் விபத்தில் இறந்த தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் குழந்தையை அமர வைத்து விழா நடத்திய சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ பணியால் போக்குவரத்து மாற்றம்..! இந்த ரூட் வழியா போறவங்க செக் பண்ணிக்கங்க..!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர்கள் சவுந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியினர். இவர்களது மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து போனார். அப்போது அவருக்கு வயது 21. அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ. மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது.
அக்கா, தங்கையின் குழந்தைகளுக்கு தாய்மாமன் மடியில் வைத்து காதுகுத்து, மொட்டை அடிப்பது வழக்கம். ஆனால் பாண்டித்துரை இறந்து போனதால், குடும்பத்தின் சோகத்தில் இருந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களுக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதன்படி பாண்டித்துரையின் மெழுகு உருவச் சிலையை வடிவமைத்து, அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டு தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக தாய்மாமன் மெழுகு சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக மண்டபம் வந்தது. அதன்பின் அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது. அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டி துரையின் கனவாக இருந்துள்ளது. இதனை குடும்பத்தினரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் அவரது அச்சு அசல் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச் சொல்லியுள்ளனர். ‘என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது. பேரக் குழந்தைகளுக்கு தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது. என் மகளின் ஆசையும் நிறைவேறியது’ என பாண்டித்துரையின் பெற்றோர் கண்கலங்க கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
