ராட்சத ரம்பம் போல மூக்கு... வலையை போட்டுட்டு வெயிட் பண்ண மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமிகவும் அரிய வகை மீனாக கருதப்படும் சாஃபிஷ் (saw fish) அல்லது கார்பெண்டர் சுறா (carpenter shark) ஒன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மீனவரின் வலையில் சிக்கி இருக்கிறது. கிரேன் மூலமாக அந்த ராட்சத மீனை மீனவர் தூக்கிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிற்து.
பெரும் சோகம்! 5 இந்திய மாணவர்கள் மரணம்.. கனடா இந்திய தூதர் வெளியிட்ட செய்தி..! நடந்தது என்ன?
ராட்சத மீன்
கர்நாடகாவின் மால்பே பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் வீசிய வலையில் சிக்கி இருக்கிறது இந்த ராட்சத கார்பெண்டர் சுறா. 10 அடி நீளமுள்ள இந்த மீன் 250 கிலோ எடை இருந்து இருக்கிறது. ரம்பம் போன்ற மூக்கை கொண்டிருக்கும் இந்த மீன் மிக அரிய வகை உயிரினமாக கருதப்பட்டு வருகிறது.
'Sea Captain' என்னும் மீன்பிடி படகில் சென்ற மீனவர் இந்த மீனை பிடித்து இருக்கிறார். அதீத எடை காரணமாக, கிரேனின் துணை கொண்டு இந்த மீனை வழக்கமாக மீன் ஏலம் விடும் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் படகு உரிமையாளர்கள். ஆனால், அது மிகப் பெரிய சிக்கலை படகு உரிமையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள் மீன்வளத் துறை அதிகாரிகள்
அரிய உயிரினம்
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் அட்டவணை 1 இன் படி இந்த கார்பெண்டர் சுறா அரிய வகை உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை விற்பனை செய்வது அல்லது வேட்டையாடுவது ஒரு புலியை கொல்வதற்கு சமமான தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
விசாரணை
கர்நாடகாவில் பிடிக்கப்பட்ட இந்த அரியவகை மீன் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறுகிறார் மீன்வளத் துறையின் இணை இயக்குனரான கணேஷ்.
கார்வாரில் அமைந்து உள்ள காகதியா பல்கலைக்கழகத்தின் கடலியல் தொழில்நுட்ப பிரிவு உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் டாக்டர் சிவகுமார் இதுபற்றி பேசுகையில்,"கடந்த பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த மீன்கள் 10 ல் ஒரு மடங்கு மட்டுமே தற்போது இந்திய கடல்களில் காணப்படுகின்றன" என்றார்.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் கூற்றுப்படி, உலகளவில் அழிந்துவரும் மீன் வகைகளில் இந்த கார்பெண்டர் சுறாவும் ஒன்றாகும். இந்த மீனில் மொத்தம் 5 வகைகள் உள்ளன. அவை அனைத்துமே அழிந்துவரும் மீன்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் 3 வகை மீன்கள் மிகவும் அரியவகை மீன்களின் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த அரியவகை மீனை பாதுகாக்க வேண்டும் எனவும் அதன்மூலம் மட்டுமே இந்த வகை மீன்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
As per the experts, Carpenter sharks are an endangered species with their population has been on a decline. They are a protected species in India under Schedule I of the Wildlife Protection Act 1972.pic.twitter.com/mEruTiwFyQ
— Mangalore City (@MangaloreCity) March 12, 2022
"என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!