'தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம்'... 'முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை'... வெளியான முடிவுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டசபை கூட்டம் தொடங்க இருக்கும் நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது இம்மாதம் 14-ந் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையைக் கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் காலை 10 மணிக்குச் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்
