'விறுவிறு'வென நடைபெறும் 'வாக்கு' எண்ணிக்கை.. இதற்கு மத்தியில் வைரலாகும் நடிகர் 'சித்தார்த்'தின் 'ட்வீட்'!!..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
![actor siddharth tweets amid elections in 5 states actor siddharth tweets amid elections in 5 states](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/actor-siddharth-tweets-amid-elections-in-5-states.jpg)
இதில், தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக கட்சி, சுமார் 130 தொகுதிகளுக்கு மேல் வரையிலும், அதிமுக கட்சி சுமார் 90 தொகுதிகளுக்கு மேல் வரையிலும், முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் (Siddharth) செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சமீப காலங்களில், அரசியல் சார்ந்த கருத்துக்களை எந்த பயமுமின்றி, வெளிப்படையாக தெரிவிக்கும் பழக்கம் உடையவர் நடிகர் சித்தார்த். சமீபத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல், மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு, இந்தியாவில் கடுமையாக அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்றும், அவர்கள் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றும் நேரடியாக, மத்திய அரசை விமர்சனம் செய்திருந்தார். அதே போல, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாட்டையும், தனத ட்வீட்டில் கடுமையாக சித்தார்த் விமர்சனம் செய்திருந்தார். சித்தார்த்தின் இந்த கருத்துக்களுக்கு, அதிகம் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பின.
இந்நிலையில், இன்று 5 மாநிலங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது ட்வீட் ஒன்றை சித்தார்த் செய்துள்ளார். அதில், 'மோடி, ஓ மோடி' என 'Elections 2021' ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
Modiiii...Ohhh Modiiii... #Elections2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021
ஒருபுறம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை களம் பரபரப்பாக காணப்படும் அதே வேளையில், சித்தார்த் செய்த இந்த ட்வீட்டும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)