'உயிரோடு இருப்பவருக்கு...' 'ஊரெங்கிலும் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்...' - என்னதான் இருந்தாலும், அதுக்காக இப்படியா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் ஆத்தூரை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரராகவன் இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் கணவர் வீட்டிலிருந்து வெளியேறி தனது பெற்றோருடன் பெரம்பலூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கணவரின் உறவினர்கள் வீர ராகவனின் மனைவி இறந்து விட்டதாகக்கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பெரம்பலூர் நகர் எங்கிலும் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் அவர் 7-10-2020 தேதி அன்று இரவு அந்த பெண் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு ஆழ்ந்த வருத்ததுடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என அந்தப் போஸ்டரில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட தகவலை அவரின் குடும்பத்தினர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தனர். சுவரொட்டியில் குறிப்பிட்ட பெண்ணுக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள காட்டுக்கொட்டாய் சேர்ந்த தாய்மாமன் மகனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை, ஆறு மாதங்களுக்கு முன் அந்த பெண் பெரம்பலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது கணவர் குடும்பத்தினரும் சொத்தில் பங்கு கேட்டு இவர் மறுமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறுமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண்ணுக்கு சொத்தில் பங்கு கேட்டதால் ஆத்திரமடைந்த அவரது கணவரின் குடும்பத்தினர் இப்படியான ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மறைந்த கணவரின் வீட்டார் என்னை அவமானப்படுத்தும் விதமாக இதுபோன்று போஸ்டர் ஒட்டி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போஸ்டர்கள் ஒட்டப்பட்டபோது அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களில் போஸ்டர் ஒட்டிய மனிதர்களின் முகம் சிக்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.