"தெரியாம நடந்த 'தப்பு',.. அதுக்கு இத்தன 'லட்சம்' அபாரதமா??..." டி 20 தொடரில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் (Big Bash League) என்ற டி 20 போட்டிகள் மிகவும் பிரபலம்.
இந்த தொடரில் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள் கலந்து கொள்ளும் பிக் பாஷ் லீக் தொடர்களும் நடைபெறும். இந்நிலையில், நேற்று சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
அப்போது இந்த போட்டியின் போது சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஹெய்லி சில்வர் ஹோல்ம்ஸ் என்ற வேகப்பந்து வீராங்கனை இடம்பெற்றிருந்தார். அவர் காயம் காரணமாக, கடைசி சில போட்டிகளில் அணியில் இடம்பெறாமல் போயிருந்தார்.
அவரை மீண்டும் அணியில் அதிகாரபூர்வமாக சேர்க்க, சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஒப்புதல் எதுவும் பெறாத நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அணியில் இடம்பெற்றிருந்தார். இதனையடுத்து போட்டி தொடங்கிய சில மணித்துளிகளிலேயே தங்களது தவறை அறிந்து கொண்ட சிட்னி சிக்ஸர்ஸ் அணி, பின்னர் சுதாரித்து கொண்ட நிலையில், அதன்பின் ஹெய்லியை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதிலும் பயன்படுத்தவில்லை.
எனினும், சிட்னி அணி செய்த தவறுக்காக அந்த அணிக்கு சுமார் 18 லட்சம் ரூபாய் (25,000 டாலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அணியே தவறை ஒப்புக் கொண்டதால், அந்த அபராத தொகையில் 12 மாதங்களுக்கு 11 லட்ச ரூபாயை நிறுத்தி வைத்தும் கருணை காட்டியுள்ளது பிக் பாஷ் தொடர் நிர்வாகம்.