திடீரென 'சீல்' வைக்கப்பட்ட மன்சூர் அலிகான் வீடு...! 'என்ன' காரணம்...? - சென்னை 'மாநகராட்சி' அதிரடி நடவடிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் திரைப்பட நடிகரான மன்சூர் அலிகான் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதாக மாநகராட்சி ஊழியர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட உலகின் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் பெயர்போனவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் திரைப்பட உலகில் மட்டுமல்லாது தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.
முதலில் நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் கூட போட்டியிட்டு தோல்வி கண்டார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அவர் தமிழ் தேசிய புலிகள் கட்சியை தொடங்கினார்.
அதோடு சர்ச்சைகளுக்கு பெயர்போன மன்சூர் அலிகான், நடிகர் விவேக் மரணம் குறித்தும், கொரோனா தடுப்பு மருந்து குறித்தும் அவதூறு பரப்பியதற்காக மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் புதியதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மன்சூர் அலிகானுக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளது. இந்நிலையில் அவரின் சூளைமேடு மற்றும் பெரியார் பாதையில் இருக்கும் வீடுகள் புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதாக புகார் எழுந்துள்ளது.
வீட்டை கட்டுவதற்கு சுமார் 2500 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து கட்டியுள்ள நிலையில் அவரின் வீடு அரசு அதிகாரிகளால் சீல் வைக்கபட்டுள்ளது.