'அப்பா முழு சுதந்திரம் கொடுத்தாரு'... 'சிவில் சர்வீஸ் தேர்வில் 75-வது இடம்'... 'சாதித்த பிரபல நடிகரின் மகன்'... தமிழக கல்வி, சுற்றுசூழலில் முழுக்கவனம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 05, 2020 08:29 AM

ஆண்டுதோறும் மத்திய குடிமைப் பணி தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு நடைபெற்ற முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு  ஆகியவற்றில் தேர்வானவர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், நேர்முக தேர்வுகள் தாமதமாக நடைபெற்றது.

Actor Chinni Jayanth\'s son secured 75th rank in Civil Service Exam

இதையடுத்து அந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளிவில் 75-வது இடம் பெற்று அசத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ''தான் வாழ்க்கையில் என்னாவாக வேண்டுமென தனக்குப் பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாகத் தெரிவித்தார். தமிழகத்தின் வலிமைகளான கல்வி, சுற்றுச்சூழல், தொழில் வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும்'' அவர் கூறியுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ருதன் ஜெய்னுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நடிகரின் மகன் நடிப்பு துறையை விட்டு, மக்களுக்குச் சேவை செய்யக் கடினமாகப் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது, பலருக்கு முன்மாதிரியாக அமையும் என, பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Actor Chinni Jayanth's son secured 75th rank in Civil Service Exam

இதனிடையே அகில இந்திய அளவில் பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Chinni Jayanth's son secured 75th rank in Civil Service Exam | Tamil Nadu News.