சப்-கலெக்டர் ஆனார் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன்.. குவியும் வாழ்த்து.. எந்த மாவட்டம் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்மூத்த நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சப்-கலெக்டர் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவின் 90-களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சின்னி ஜெயந்த். குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லத்தனம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில், தனது தனித்துவத்தை காட்டியிருப்பார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் சின்னி ஜெயந்த் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் சப்-கலெக்டர் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75-வது இடத்தை பிடித்து அசத்தியிருந்தார்.
தற்போது தூத்துக்குடி மாவட்ட சப்-கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சின்னி ஜெயந்துக்கும், அவரது மகனுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
