'குச்சி மிட்டாய்னு நினச்சு ஜெலட்டின் குச்சியை கடித்த சிறுவன்...' 'கடிச்ச உடனேயே வெடிச்சுடுச்சு...' 'கடைசியில காவிரி ஆற்றுக்கு கொண்டு போய்...' நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சியில் 5 வயது சிறுவன் உறவினர் மீன் பிடிக்க வாங்கி வைத்திருந்த ஜெலட்டின் வெடிப்பொருளை சாக்லேட் என நினைத்து சாப்பிட்டு வாய் வைத்து இறந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள அலகரை கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரின் 6 வயது மகன் அவரின் பெரியப்பா கங்காதரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். கங்காதரன் நேற்று ஆற்றில் மீன் பிடிப்பதற்காக பாப்பாபட்டி கிராமத்திலுள்ள கல்குவாரியில் இருந்து 3 ஜெலட்டின் குச்சிகளை (வெடிபொருள்) வாங்கி வந்துள்ளார். அதில் 2 ஜெலட்டின் குச்சிகளை எடுத்துக் கொண்டு உறவினர்களான தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோருடன் அன்று மாலையே காவிரி ஆற்றுக்குச் சென்று, அதனை வெடிக்கச் செய்து மீன் பிடித்துள்ளார்.
வீட்டில் இருந்த சிறுவன் பெரியப்பா கட்டில் மீதிருந்த ஜெலட்டின் குச்சிகளை (வெடிபொருள்) நேற்று அந்த சிறுவன் குச்சி மிட்டாய் என நினைத்து கடித்துள்ளார். அப்போது ஜெலட்டின் வெடித்துச் சிதறியதில் சிறுவனின் வாய் மற்றும் முகத்தின் பிறபகுதிகளில் படுகாயம் ஏற்பட்டதுள்ளது.
காயமடைந்த சிறுவனை உடனடியாக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனை சென்று சேர்வதற்குள் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டார். யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக சிறுவனின் உடலை உறவினர்கள் அனைவரும் இணைந்து மணமேடு காவிரியாற்றில் எரித்துவிட்டனர்.
வெடிவிபத்தால் சிறுவன் இறந்த சம்பவம் போலீசாருக்கு ஒரு நாள் கழித்தே தகவல் வந்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் தொட்டியம் போலீசார், கங்காதரன், மோகன்ராஜ் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.