செம டுவிஸ்ட்... 28 பந்துல 80 ரன் 'அடிச்சவர'... யாரு எடுத்து 'இருக்காங்க' பாருங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 19, 2019 08:23 PM

அபுதாபியில் நடைபெற்ற டி20 போட்டியில் 28 பந்துகளில் 80 ரன்கள் குவித்து மிரட்டிய இங்கிலாந்து இளம்புயல் டாம் பேண்டன் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகபட்ச எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்தார். அதோடு ஐபிஎல் ஏலத்திலும் அவரது பெயர் இருந்ததால், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

IPL Auction Live: KKR bought Tom Banton for 1 crore

இதுகுறித்து ஒரு பேட்டியில் டாம் பேண்டன் தான் மும்பை அணிக்காக ஆட ஆசைப்படுவதாக தெரிவித்து இருந்தார். எனினும் இன்றைய ஏலத்தில் அவரை சென்னை, மும்பை அணிகள் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கொல்கத்தா அணி டாம் பேண்டனை ஏலத்தில் எடுத்துள்ளது.

சுமார் 1 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி டாமை ஏலத்தில் எடுத்து இருப்பதால், வரும் ஐபிஎல் போட்டிகளில் அவர் மீண்டும் ஒரு அனல் பறக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.