இந்தவாட்டி 'மிஸ்' பண்ணக்கூடாது... தமிழக வீரரை 'ஸ்கெட்ச்' போட்டுத்தூக்கிய... பிரபல அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 19, 2019 09:25 PM

கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஏலத்தில் மொத்தமுள்ள 73 இடங்களுக்கு 332 வீரர்கள் போட்டி போட்டனர். இதனால் ஏலத்தில் கடும்போட்டி நிலவியது. குறிப்பாக சென்னை அணி யாரை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

IPL Live Auction: CSK Bought TN Young Player Sai Kishore

பேட் கம்மின்ஸ், மேக்ஸ்வெல், டாம் பேன்டண் ஆகியோரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக பியூஷ் சாவ்லா(6.75 கோடி), சாம் கரண்(5.5 கோடி) ஜோஷ் ஹாசல்வுட்(2 கோடி) ஆகியோரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதனால் சென்னை அணியின் கைவசம் 35 லட்சங்கள் மட்டுமே மீதம் இருந்தது.

இந்தநிலையில் சையது முஷ்டாக் அலி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்து கலக்கிய தமிழக இளம்வீரர் சாய் கிஷோரை சென்னை அணி 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. முன்னதாக சாய் கிஷோரை யாரும் எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் அவரை எடுக்கக்கூறி சென்னை அணிக்கு கோரிக்கை விடுத்தனர். கடைசியில் ரசிகர்களின் கோரிக்கை+தமிழக வீரர் என்ற அடிப்படையில் சென்னை அணி சாயை ஏலத்தில் எடுத்திருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட சாய் கிஷோரை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது சையது முஷ்டாக் அலி போட்டிக்குப்பின்னர் அவர்மீது வெளிச்சம் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.