பந்து 'லேட்டா' வீசுனதுக்கு... அவரோட 'ராஜதந்திரம்' தான் காரணமாம்... ஷாக் பிளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Dec 16, 2019 08:37 PM
நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
முதலில் பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் சம்பளத்தில் சுமார் 80% அபராதமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் பொல்லார்டின் ராஜதந்திரம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரையில் 2-வதாக பந்துவீசும் அணி பனிப்பொழிவை சமாளித்து தான் பந்துவீச வேண்டும். அது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறும் என்பதால், தான் இப்படியொரு ஐடியாவை பொல்லார்டு பின்பற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக வீழ்த்தியது.
குறிப்பாக சுமார் 198 பந்துகள் வீசியும் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிக மோசமான 4-வது பந்துவீச்சாக இது பதிவாகி இருக்கிறது.