'கிளவுசுல தப்பு கண்டுபுடிச்சீங்க'...'இப்போ எங்க போனீங்க'?...'டென்ஷன் ஆன ரசிகர்கள்'... உண்மை என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 11, 2019 11:43 AM

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி அவுட் ஆன விதம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அம்பயரின் தவறு தான் காரணம் என ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பொங்கி வருகிறார்கள்.

Dhoni run out is umpiring error Fans raise questions

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியானது நேற்று முன்தினம் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டதால் ஒத்திவைக்கப்பட்ட போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது.

இதனிடையே போட்டியின் 48வது ஓவரை நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் வீசினார். அப்போது சிங்கிள் எடுக்க முயன்றபோது தோனி ரன் அவுட் ஆனார். இது இந்திய ரசிகர்களுக்கு இடியாக அமைந்தது. ஆனால் தற்போது தோனி ரன் அவுட் ஆன விதம் பேசுபொருளாக மாறியுள்ளது. நியூசிலாந்து வீரர் ஃபெர்குசன் பந்து வீசுவதற்கு முன்பாக  30 யார்டு வட்டத்துக்கு வெளியே 6 வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் மூன்றாவது பவர் பிளே எனப்படும் 40 - 50 ஓவர்களுக்குள், 5 பீல்டர்கள் மட்டும்தான் நிறுத்தப்பட வேண்டும். இதை அம்பயர் கவனிக்கவில்லை என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அது மட்டும் நடக்காமலிருந்தால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும் என ரசிகர்கள் குமுறி வருகிறார்கள். தோனியின் கிளவுசில் இருந்த முத்திரையை கவனித்து அதை பெரிதுபடுத்திய ஐசிசி, இதுபோன்ற முக்கியமான விஷயங்களை கவனிக்க தவறியது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் அது உண்மையாக இருந்து அம்பயர் அதை கவனித்து நோ-பால் வழங்கியிருந்தாலும், ப்ரீ ஹிட்டிலும் ரன் அவுட் உள்ளது, எனவே தோனி களத்தில் இருந்திருக்க முடியாது என, ட்விட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் அது கிராபிக்ஸ் தவறாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் சிலர் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ICCWORLDCUP #MSDHONI #NEW ZEALAND #RUN OUT #SEMI FINAL