'எப்போதும் 'தோனி'யே பினிஷிங்'...'கொடுப்பாருனு சொல்லிக்கிட்டு இருந்தா'?... கொந்தளித்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 11, 2019 09:19 AM
அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி, இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது என கூறலாம்.

நேற்று முன்தினம் தொடங்கிய இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டியில் மழை குறிக்கிட்டதால், இந்தப் போட்டிகள் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 239 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகிய இருவரும் வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனிடையே போட்டிக்கு பின்பு பேசிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் '' இந்திய அணிக்கு 240 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் ஒன்றும் இல்லை. தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை நியூசிலாந்து வீரர்கள் வீழ்த்தியது, இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது.
எப்போதுமே ரோகித் மற்றும் விராத் கோலி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை என கூற முடியாது. இதில் அனைவரின் பங்கும் இருக்கிறது. எப்போதும் அவர்கள் இருவரையும் சார்ந்திருக்க முடியாது. அதேபோன்று எப்போதும் தோனி வந்து போட்டியை முடித்து வைப்பார் என எதிர்பார்த்து கொண்டிருப்பது சரியல்ல.
தோனியும், ஜடேஜாவும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்தார்கள். ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன் பார்டனர்ஷிப் என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் கேப்டன்ஸி அனைத்தையும் தவிடு பொடியக்கிவிட்டது'' என அவர் கூறினார்.
