‘ரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறிய தோனி’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 10, 2019 09:16 PM
ரன் அவுட் ஆனதும் சோகமாக வெளியேறி தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் மழையால் தடைப்பட்ட இந்தியா-நியூஸிலாந்துக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை குவித்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதில் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் அடுத்தடுத்து 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்னில் அவுட்டாகினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. இதில் இருவரும் 32 ரன்னில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதனைத் தொடர்ந்து வந்த ஜடேஜா மற்றும் தோனி கூட்டணி அதிரடி காட்ட ஆரம்பித்தது. இதில் ஜடேஜா 77 ரன்களும், தோனி 50 எடுத்தனர். இந்நிலையில் 49.3 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. இதில் அவுட்டானவுடன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Can't watch him like this..😭#CWC19 #INDvNZL #Dhoni pic.twitter.com/bde61e9i4s
— $uDh¡R (@iSudhir_) July 10, 2019