‘இது என்னோட பேவரைட் சாங்’.. சூர்யா பட பாடலை பாடி காட்டி அசத்திய ‘சின்ன தல’யின் வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 18, 2019 08:46 PM
சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகர் சூர்யா நடித்த படத்தின் பாடல் ஒன்றை பாடிக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வ்ருகிறது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசனில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7 -ல் வெற்றியும் 2 -ல் தோல்வியும் அடைந்து 14 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் அணி தோல்வியைத் தழுவியது. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அவர் விளையாடவில்லை. அதனால் சுரேஷ் ரெய்னா கேப்டனாக சென்னை அணியை வழி நடத்தினார்.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சன் மற்றும் டு பிளிஸிஸ் தவிர அடுத்த வந்த வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்ததால் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை 16.5 ஓவர்களில் ஹைதராபாத் அணி 137 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தோனி இல்லாததால் சென்னை அணி தடுமாறுகிறது என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், தனக்கு பிடித்த படம், மறக்க முடியாத ஐபிஎல் போட்டி போன்றவற்றை பகிர்ந்துள்ளார். மேலும் சூர்யா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ என்கிற படத்தில் வரும் ‘முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் பிடிக்கும் என பாடி காட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
One #Yellove with the one and only #ChinnaThala! 🦁💛 #WhistlePodu @ImRaina pic.twitter.com/HNDwjkkWMF
— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2019
