‘ஒரு ரன் எடுக்க வந்தா இப்டியா பயங்காட்றது’.. ‘இவருகிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணுமோ’.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 18, 2019 12:18 AM

சென்னையை வீழ்த்தி ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது.

WATCH: Rashid Khan\'s excellent run out attempt goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 33 -வது போட்டி இன்று(17.04.2019) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டானக சென்னை அணியை வழி நடத்தினார்.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டு ப்ளிஸிஸ் 45 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி 16.5 ஓவர்களின் முடிவில் 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் 50 ரன்களும், ஜானி பேர்ஸ்ட்டோ 61 ரன்களும் எடுத்து அசத்தினர்.

முதல் இன்னிங்ஸ்ஸில் 17 -வது ஓவரை வீசிய ரஷித்கான் ஜடேஜாவை ரன் அவுட் செய்ய முயற்சி செய்தார்.

Tags : #IPL #IPL2019 #CSKVSSRH #WHISTLEPODU #YELLOVE #ORANGEARMY