என்னது ‘தல’ தோனி இன்னைக்கு விளையாடலயா..! அப்போ யாரு சூப்பர் கிங்ஸ் கேப்டன்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 17, 2019 07:54 PM
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக சென்னை அணியின் கேப்டன் விளைடாவில்லை.

ஐபிஎல் டி20 லீக்கின் 33 -வது போட்டி இன்று(17.04.2019) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இதனை அடுத்து இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா வழி நடத்துகிறார்.
இதனை அடுத்து டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
