‘ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் திடீர் விலகல்’..‘ஜெயிச்சா ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு’.. பலபரீட்சையில் சென்னை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 17, 2019 06:42 PM

ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் சாகிப் அல் ஹாசன் அந்த அணியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2019: Shakib set to leave SRH to attend Bangladesh camp for WC

ஐபிஎல் டி20 லீக்கின் 33 -வது போட்டி இன்று(17.04.2019) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 7 -ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இதனை அடுத்து இன்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டரான வங்கதேச வீரர் சாகிப் அல் ஹாசன் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பையில் விளையாடும்  வங்கதேச வீரர்களின் பட்டியலில் சாகிப் தேர்வாகியுள்ளதால் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : #IPL #IPL2019 #CSKVSSRH #MSDHONI