'மழைக்கு வாய்ப்பில்லை ராஜா'... 'அதான் இவரே சொல்லிட்டாரே'... உற்சாகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jul 10, 2019 10:51 AM

இந்தியா - நியூசிலாந்து போட்டி இன்று முழுவதும் நடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Today rain wont affect the remaining part India vs New Zealand

உலகக்கோப்பை போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற  முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதனிடையே எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தார்கள். மேலும் ரசிகர்கள் அதே நுழைவுச்சீட்டைக் காண்பித்து இன்றைய போட்டியைக் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இன்றைய இந்தியா - நியூசிலாந்து போட்டி முழுவதுமாக நடைபெறும் எனவும் மழை குறுக்கிட வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போட்டியின் போது ஒருவேளை மழை பெய்தால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தானாகவே முன்னேறிவிடும். எனவே இன்றைய போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

Tags : #ICCWORLDCUP2019 #WORLDCUPINENGLAND #ICCWORLDCUP #TAMILNADU WEATHERMAN #NEW ZEALAND