‘தொடர்ந்து ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டதால்’... 'செம்ம கடுப்பான கேப்டன் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jul 10, 2019 09:30 AM

நியூஸிலாந்து எதிரான அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் வாய்ப்பை தோனி தவறவிட்டார்.

Virat Kohli gets angry on MS Dhoni for a missed run out chance

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து வீரர்கள் திணறி வந்தனர்.

இதில் அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்திருந்தார். இதனை அடுத்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறிக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் ரிவஸ்டே முறைப்படி அடுத்தநாள்(10.07.2019) தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியின் 46 -வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ராஸ் டெய்லர் பந்தை அடித்து ரன் எடுக்க ஓடினார். அப்போது சஹால் வேகமாக பந்தை எடுத்து தோனியிடம் வீசினார். ஆனால் தோனி பந்தை தவறவிட்டார். அதனால் நியூஸிலாந்து வீரர்கள் மற்றொரு ரன் எடுக்க ஓடினர். இதனால் அப்போது கோலி சற்று கோபமடைந்தார்.

Tags : #ICCWORLDCUP2019 #MSDHONI #VIRATKOHLI #INDVNZ #TEAMINDIA #CWC19 #RUNOUT