‘இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனை’.. செமி பைனலில் புது வரலாறு படைத்த ‘தல’தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 09, 2019 11:59 PM
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் புதிய உலகசாதனையை தோனி படைத்துள்ளார்.

மான்செஸ்டர் மைதானத்தில் இன்று(09.07.2019) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதில் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் முறைப்படி போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 237 ரன்களை இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மீண்டும் குறிக்கிட்டதால் போட்டி நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி புதிய உலகசாதனை படைத்துள்ளார். இப்போட்டி தோனி விளையாடும் 350 -வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை தோனி அடைந்துள்ளார். முன்னதாக சச்சின் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடதக்கது. மேலும் 350 போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கை வீரர் 360 போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அவர் 44 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் தோனி அடைந்துள்ளார்.
