இதுக்குத்தான் அவர் வேணும்னு சொல்றோம் – இரண்டாவது டெஸ்டில் சம்பவம் செய்த தாக்கூர் – முன்னாள் வீரர்கள் பாராட்டு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி எப்போதெல்லாம் விக்கெட் எடுக்க முடியாமல் தினறுகிறதோ அப்போதெல்லாம் ஆபத்பாந்தவனாய் வந்து முக்கிய விக்கெட்டுகளை காலி செய்துவருகிறார் ஷர்துல் தாக்கூர்.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்ப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது.
202 க்கு ஆல் அவுட்
இதனையடுத்து ஜோகன்ஸ்பர்க்கில் நேற்று துவங்கிய போட்டியில் சீரிஸை வெல்லும் நோக்கோடு சீரியசாக களத்தில் இறங்கியது தென்னாபிரிக்கா. இந்தப் போட்டியிலும் டாசை வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே இந்திய வீரர்கள் சறுக்கியதால் 202 ரன்களை மட்டுமே இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த தென்னாபிரிக்க வீரர்கள் இந்திய அணியின் அசுரத்தனமான பந்துவீச்சை நேர்த்தியாக ஆடத் தொடங்கினர். துவக்க வீரர் மார்க்ரம் 7 ரன்னில் வெளியேறினாலும் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் – கீகன் பீட்டர்சன் ஜோடி இந்திய பவுலர்களின் பொறுமையை சோதித்தது.
கூட்டணிக்கு குண்டு
அப்போது ஷர்துல் தாக்குரிடம் பந்தைக்கொடுத்தார் கேப்டன் ராகுல். அதன் பலனாக தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் கூட்டணிக்கு குண்டு வைத்தார் தாக்கூர். எல்கர், பீட்டர்சன், டுசன் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்தார் தாக்கூர்.
இப்போதல்ல, ஐபிஎல் போட்டிகளிலேயே இதேபோன்ற சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்து தூள் கிளப்பியிருக்கிறார் ஷார்துல். இதனையைடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாபர் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் தாக்கூரை புகழ்ந்துள்ளனர்.
இதுக்கு மேலயும் தப்பு பண்ணாதீங்க டிராவிட்.. சீக்கிரம் முடிவு எடுங்க.. கறாராக சொன்ன தினேஷ் கார்த்திக்
வாசிம் ஜாபரின் கிண்டல்
வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஷார்துல் தாக்கூர் புதிய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் பந்து வீசுவதேயில்லை. பிரிக்க முடியாத பார்ட்னர்ஷிப்களை உடைப்பதே லார்டு ஷார்துல் தாக்கூரின் வேலை” என கிண்டலாகப் பதிவு செய்துள்ளார்.
ஆட்டத்தின் இரண்டாவது தேநீர் இடைவேளை வரையில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்களை இழந்து 191 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணியில் தாக்கூர் 5 விக்கெட்டுகளையும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
That moment when you realise you will have to bowl again to @cheteshwar1 in the nets @ChennaiIPL #IPLAuction #IPL2021 pic.twitter.com/hT2zzqn3Jq
— Wasim Jaffer (@WasimJaffer14) February 18, 2021

மற்ற செய்திகள்
