முதல் மேட்ச்சிலேயே... தெறித்த ஸ்டெம்ப்புகள்!.. இந்தியாவுக்கு மறைமுக சிக்னல்!.. யார் இந்த இங்கிலாந்து புயல்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசீனியர் வீரர்களே விக்கெட்டுகள் எடுக்க தடுமாறிய போது, அறிமுகமான முதல் மேட்சிலேயே ஸ்டெம்ப்புகளை அசத்தியிருக்கிறார் இங்கிலாந்து இளம் பவுலர்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி, லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை செய்தது. இங்கிலாந்து அணியில் ஓலே ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பிரேஸே ஆகியோருக்கு முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில், டிரெண்ட் போல்ட் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியில் டாம் லாதம், டெவோன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முதல் நாள் ஆட்டத்தின் முதல் ட்ரிங்க்ஸ் வேளை வரை, இங்கிலாந்தால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. ட்ரிங்க்ஸ் இடைவேளை வரை மொத்தம் 13 ஓவர்கள் வீசப்பட்டிருந்தது. அப்போது ஸ்கோர் 47-0. ஒரு விக்கெட் கூட விழாமல் இருந்தது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் அறிமுக செய்யப்பட்ட ஓலே ராபின்சன், அதிரடியாக விளையாடி வந்த டாம் லாதமை போல்டாக்கினார். Off stump-க்கு வந்த பந்தை defence ஆட முயன்ற போது, பந்து inside edge ஆகி போல்டானார். இதன் மூலம், தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
சீனியர் பவுலர்களான ஆண்டர்சன், பிராட் பந்துவீச்சில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. விக்கெட்டுகளை குறிவைத்து அவர்கள் பந்துவீசியது போன்று தெரியவில்லை. பெரும்பாலான பந்துகள் லைனுக்கு வெளியே சென்றன. இதனால், நியூசிலாந்து ஓப்பனர்கள், பெரிதாக சிரமமின்றி அவர்களை எதிர்கொண்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் short பந்துகள் கூட அதிகமாக முயற்சி செய்யவில்லை.
எனினும், ஒரு விக்கெட் விழுந்த பிறகு பவுலிங் செய்ய வந்த மார்க் வுட் வரிசையாக short பந்துகளை வீசி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். ஓலே ராபின்சன் off stump-ஐ குறி வைத்து அதிகம் பந்துவீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், மார்க் வுட் பந்தை தான் இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.