‘செஞ்சுட்டேன்’... ‘வேற என்ன?’... மயங்க் கேட்ட கேள்வி... ‘சைகை காட்டிய கோலி’... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 15, 2019 06:59 PM

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மயங்க் அகர்வால் மற்றும் கேப்டன் விராட் கோலியிடையே சைகையிலேயே நடைப்பெற்ற உரையாடல்கள் வைரல் ஆகி வருகின்றன.

Virat Kohli wants triple hundred from Mayank using hand gestures

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைப்பெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் செய்து, 58.3 ஓவர்களில், 150 ரன்கள் எடுத்து சுருண்டது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழக்க, மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும், 2-வது நாளாக ஆட்டத்தை இன்று தொடர்ந்தனர்.

புஜாரா அரை சதத்துடன் வெளியேற, கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால், டெஸ்ட் போட்டியில் 3-வது சதத்தை பதிவுசெய்தார். பின்னர் 150 ரன்களை கடந்தபோது, மயங்க் அகர்வால் பேட்டை உயர்த்தி காண்பிக்க, டிரஸ்ஸிங் ரூமிலிருந்து, 5 விரல்களை சைகையால் காட்டி, 50 ரன்கள் எடுத்து, டபுள் செஞ்சூரி அடிக்குமாறு  2 விரல்களை உயர்த்தி காட்டினார் விராட் கோலி.

இதற்கு கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டிய மயங்க், 200 ரன்கள் கடந்ததும், 2 விரல்களை காட்டி, நீங்கள் கூறியதை செய்துவிட்டேன் என, கோலிக்கு மீண்டும் சைகை காட்டினார். அதற்கு, விராட் கோலி மறுபடியும் 3 விரல்களை காட்டி, ட்ரிபிள் செஞ்சுரி அடிக்குமாறு மயங்க் அகர்வாலிடம் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன. கடைசியில், 243 ரன்களுக்கு, மயங்க் அகர்வால் அவுட்டானார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #MAYANKAGARWAL