காயத்தால் விலகிய 'பும்ரா'.. மாற்று வீரராக உள்ள வந்தது யாரு??.. வெளியான 'OFFICIAL' அறிவிப்பு!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை போட்டிகள், நாளை மறுநாள் (16.10.2022) ஆஸ்திரேலியாவில் வைத்து ஆரம்பமாக உள்ள நிலையில், அனைத்து அணிகளும் இதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
Also Read | 20 வருசமா கல்லூரியில் பியூன் வேலை.. "இப்ப அதே கல்லூரி'ல".. கடின உழைப்பால் நிஜமான கனவு!!
முன்னதாக, ஆரம்பத்தில் தகுதி சுற்று நடைபெறும் நிலையில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பல அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இதில் இருந்து தேர்வாகும் நான்கு அணிகள், அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் காணும். இதன் பின்னர், ஏற்கனவே தேர்வான அணிகளுடன் சூப்பர் 12 சுற்று நடைபெறும்.
ஏற்கனவே நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, குரூப் 2 வில் இடம்பெற்றுள்ளது. மேலும், தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி, வரும் அக்டோபர் 23 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது. டி 20 உலக கோப்பை தொடருக்காக கடந்த சில தினங்கள் முன்பு ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி, பயிற்சி ஆட்டங்களில் மோதி வருகிறது.
முன்னதாக, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த போது, உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரிட் பும்ராவும் இடம்பெற்றிருந்தார். ஆனால், காயம் காரணமாக டி 20 உலக கோப்பை தொடரில் இருந்து அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.
அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. மேலும், உலக கோப்பை தொடர் நெருங்குவதால் இதுகுறித்த ஆவலும் அதிகரித்து வந்தது. அப்படி இருக்கையில், பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர் யார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தற்போது பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ரா விலகிய போது இந்திய அணிக்கு சிக்கல் உருவாகி இருந்த நிலையில்,ஷமி சிறந்த மாற்று வீரராக இருப்பார் என்றும் தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | கேரளா - இரண்டாவது பெண் பலியான பின்.. குற்றவாளி போட்ட பதிவு?.. திடுக்கிட வைத்த பின்னணி!!