'கவிழ்ந்தது'.. குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு'.. பரபரப்பான அரசியல் சூழலில் புதிய ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jul 23, 2019 08:08 PM
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மதியம் தொடங்கியது.

முன்னதாக, தாம் பதவி விலகத் தயார் என்று சட்டப்பேரவையில், முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசியதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு தொடங்கியது. இந்த நிலையில், முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு, பெரும்பான்மையை இழந்து 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
குமாராசாமியின் தீர்மானத்தை ஆதரித்து 99 வாக்குகளும், எதிர்த்து 105 வாக்குகளும் என மொத்தம் 204 வாக்குகள் பதிவான நிலையில், காங்கிரஸ் -மஜத ஆட்சி கவிழும் நிலை உண்டாகியுள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு இன்று மாலை அமலுக்கு வந்ததாகத் தெரிகிறது.
Tags : #KARNATAKAPOLITICALCRISIS #KARNATAKATRUSTVOTE #KARNATAKAASSEMBLY #KUMARASWAMY
