தோனி'யோட 41 ஆவது பிறந்தநாள்.. ஆந்திரா ரசிகர்கள் செய்த வேற மாதிரி சம்பவம்... இணையத்தில் இப்ப செம TRENDING..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி கண்ட சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார்.

தோனியின் தலைமையில் இந்திய அணி, ஐம்பது ஓவர் உலக கோப்பை, டி 20 உலக கோப்பை உள்ளிட்ட பல முக்கிய கோப்பைகளை கைப்பற்றி, ஏராளமான சாதனைகளையும் படைத்திருந்தது.
சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்து சில ஆண்டுகள் ஆனாலும், இன்னும் தோனி மீதான Craze கொஞ்சமும் குறையவில்லை.
41 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தோனி
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங் செய்யவோ அல்லது கீப்பிங் செய்யவோ, மைதானத்தில் தோனி நுழைந்தாலே ரசிகர்கள் ஆக்ரோஷமாக கத்த தொடங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு தோனியின் ரசிகர்கள், வேற லெவலில் இன்னும் அவரைக் கொண்டாடி வரும் நிலையில், தனது 41 ஆவது பிறந்தநாளை நாளை (07.06.2022) தோனி கொண்டாட உள்ளார்.
விஜயவாடா ரசிகர்களின் வேற மாதிரி சம்பவம்
இதற்காக ரசிகர்கள் பலரும் தற்போதே வாழ்த்தத் தொடங்கி உள்ள நிலையில், ஆந்திராவிலுள்ள தோனி ரசிகர்கள் அசத்தலான விஷயம் ஒன்றை செய்துள்ளனர். ஆந்திராவின் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த தோனியின் ரசிகர்கள் சிலர் சேர்ந்து, 41 அடிக்கு கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். நாளை தனது 41 ஆவது பிறந்தநாளை தோனி கொண்டாட இருப்பதால், அவரின் வயதின் அடிப்படையில் இந்த கட் அவுட்டையும் அவர்கள் நிறுவி உள்ளனர்.
இதற்கு முன்பு, சென்னையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, 30 அடிக்கு தோனிக்கு கட் அவுட் ஒன்றையும், அதே ஆண்டில், கேரளாவில் 35 அடிக்கு கட் அவுட் ஒன்றையும் தோனியின் ரசிகர்கள் வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, விஜயவாடா பகுதியிலுள்ள தோனியின் ரசிகர்களும், தற்போது அசத்தலான கட் அவுட் வைத்துள்ளனர்.
41 Ft Cutout For #MSDhoni In Telugu States (Nandigama)
Love You Forever @msdhoni Anna
Advance Happy Birthday Thala pic.twitter.com/OtWdBtiVMa
— naveenchowdaRRykosaRaju (@AlwaysNachoMan) July 6, 2022
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது தோனியின் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
