இன்ஸ்டா லைவில் சர்ப்ரைஸாக வந்த தோனி.. ரிஷப் பந்த் வைத்த 'REQUEST'.. அடுத்த செகண்ட்டே நடந்த வைரல் 'சம்பவம்'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகள் ஆடி வருகிறது.

Also Read | தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்
இதில், முதலாவதாக ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதல் இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, இன்று (27.07.2022) நடைபெறவுள்ளது. முன்னதாக, ஒரு நாள் போட்டி தொடரில் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால், ஒரு நாள் தொடரின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து நடைபெறவுள்ள டி 20 தொடரில், ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவுள்ளனர். இந்நிலையில், ரிஷப் பந்த்தின் இன்ஸ்டாகிராம் லைவ் தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
முதலில் இன்ஸ்டாகிராம் லைவில் தோன்றிய ரிஷப் பந்த், அதன் பின்னர் ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை.இணைத்தார். தொடர்ந்து, அக்சர் படேல், இஷாந்த் ஷர்மா, சாஹல் உள்ளிட்ட பல வீரர்களும் கலந்து கொண்டனர். இதன் பின்னர், அனைவரும் ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதில் தெரிவித்தும், மாறி மாறி வேடிக்கையான விஷயங்களை பகிர்ந்து கொண்டும் வந்தனர். அப்போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை லைவில் அழைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, தோனிக்கு அழைத்த போது, அவரது மனைவி சாக்ஷி முதலில் தோன்றி, அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்தார். அடுத்து தோனியின் முகத்தை அவர் காட்டவே, லைவில் இருந்த ரசிகர்களும் தோனியின் முகத்தைக் கண்டு உற்சாகம் அடைந்தனர். அப்போது பந்த், ரோஹித் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் சிரித்துக் கொண்டே இருந்த நிலையில், அனைவருக்கும் தோனி 'ஹாய்' சொன்னார்.
தொடர்ந்து பேசிய ரிஷப் பந்த், "தோனி பாயை எப்படியாவது சிறிது நேரம் பேச வையுங்கள்" என கூறவே, கையை வைத்து மறைத்த படி, சிரித்துக் கொண்டே லைவில் இருந்து வெளியேறினார் தோனி. இதனை அறிந்ததும் பந்த், ரோஹித் மற்றும் சூர்யகுமார் ஆகியோர் சிரித்து கொண்டே இருந்தனர். வெகு சில வினாடிகள் மட்டுமே தோனி தோன்றினாலும், இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Dhoni came on live for a moment. 🌚💀 pic.twitter.com/ltgrwSxw8e
— Silly Point (@FarziCricketer) July 26, 2022

மற்ற செய்திகள்
