"தோனி அவுட்டாகி கெளம்புனதும்.. கோலி பண்ணத பாக்கணுமே.." வேற லெவலில் வைரலாகும் சம்பவம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்துள்ளது.
இந்த தோல்வியின் மூலம், சென்னை அணியின் பிளே ஆப் சுற்றும் ஏறக்குறைய மங்கி போயுள்ளதாகவே தெரிகிறது.
இந்த போட்டியில், முதலில் ஆடிய பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.
சிக்கித் தடுமாறிய சிஎஸ்கே
தொடக்கத்தில் டு பிளெஸ்ஸிஸ் அதிரடி காட்ட, அவர் விக்கெட் ஆனதும், நடுவே ரன் எடுக்க ஓரளவு ஆர்சிபி அணி தடுமாறியது. இருந்தும், மஹிபால் லோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்ததால், நல்ல ஸ்கோரை எட்டி இருந்தது ஆர்சிபி.
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கேவும், பவர் பிளேயில் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது. அப்படி இருந்தும், நடுவே அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்ததால், சிஎஸ்கே அணி இலக்கை எட்ட கடும் சிக்கலை சந்தித்தது. இதிலிருந்து சிஎஸ்கே மீள முடியாத காரணத்தினால், 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
கேள்விக்குறி ஆன பிளே ஆப் வாய்ப்பு
இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, 4 ஆவது இடத்திற்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னதாக, தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஆர்சிபி, அதற்கு ஒரு முடிவை வைத்துள்ளது. இதனால், அவர்களின் பிளே ஆப் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. மறுபக்கம், நடப்பு சாம்பியன் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு, கேள்விக்குறி ஆகியுள்ளது.
தோனியின் விக்கெட்
இதனிடையே, தோனி விக்கெட்டான போது, கோலி கொடுத்த ரியாக்ஷன் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நான்கு ஓவர்களில், 52 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி உள்ளே வந்தார். அவர் களமிறங்கியதால், நிச்சயம் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஹேசல்வுட் வீசிய 19 ஆவது ஓவரில், தோனி 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
கொண்டாடிய கோலி
2 ஓவர்களில் 39 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், முதல் பந்திலேயே தோனி அவுட்டானதால் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது, ஆர்சிபி வீரர் கோலி மிக மிக ஆக்ரோஷமாக இதனை கொண்டாடினார்.
Virat Kohli Reaction after Dhoni's Wicket 🔥🥵#CSKvRCB pic.twitter.com/I9reGu018g
— Ayush (@Ayush18virat) May 4, 2022
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8